தனக்கு சொந்தமான வீட்டை சொந்தம் கொண்டாடிய மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் போலீசில் புகார்

சென்னை: தனக்கு சொந்தமான வீட்டை காலி செய்யாமல் மகள் வனிதா சொந்தம் கொண்டாடுவதாக நடிகர் விஜயகுமார் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிரபல நடிகரான விஜயகுமார் மதுரவாயிலை அடுத்துள்ள ஆலப்பாக்கம் அஷ்டலக்ஷ்மி நகரில் வசித்து வருகிறார். அந்த வீட்டில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த வீட்டின் ஒரு பகுதியை மகள் வனிதாவுக்கு விஜயகுமார் வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வாடகை ஒப்பந்தம் முடிந்தும் பல நாட்கள் ஆகியும் வனிதா வீட்டை காலி செய்யவில்லை என்றும் வீடு தனக்கு சொந்தமானது என அவர் மிரட்டுவதாகவும் மதுரவாயல் காவல் நிலையத்தில் நடிகர் விஜயகுமார் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: