தீபாவளி சிறப்பு விற்பனை கோ ஆப்டெக்சில் துவக்கம்

திருச்சி: திருச்சி கோ ஆப்டெக்ஸ் பொதிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் ராசாமணி இன்று காலை குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். கோ.ஆப்டெக்சில் திருச்சி மாவட்ட விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டு ரூ.287.68 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி 2018க்கான விற்பனை இலக்கு ரூ.368 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்சி பொதிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி 2017ல் ரூ.193.38 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி 2018க்கு ரூ.250 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோ.ஆப்டெக்ஸ் நிறுவனம் கனவு நனவு திட்டம் என்ற  சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு 12வது மாத சந்தா தொகையை கோ.ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30  சதவீத அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது. துவக்க விழா நிகழ்ச்சியில் கோ.ஆப்டெக்ஸ் மேலாளர் சீனிவாசன், துணை மண்டல மேலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: