வாலிபரை காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டல் : போலி சிபிஐ அதிகாரி கைது

சென்னை: சினிமா காட்சிகளை போல் வாலிபரை காரில் கடத்தில் பணம் ேகட்டு அடித்து உதைத்த போலி சிபிஐ அதிகாரி உட்பட 3 பேரை போலீசார் ைகது செய்தனர். சென்னை போரூர் சமயபுரம் சாலையை சேர்ந்தவர் கருணாநிதி(32). இவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு 3 பேர்  காரில் வந்தனர். அவர்கள் கருணாநிதியிடம் நாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்றும், உங்களிடம் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு அவர் உங்களை பார்த்தால் சிபிஐ அதிகாரிகள் போல் தெரியவில்லையே என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி கருணாநிதியை வலுக்கட்டாயமாக காரில் கடத்தியுள்ளனர். பின்னர் கருணாநிதியை தி.நகரில் உள்ள சோமசுந்தரம் பூங்காவிற்கு அழைத்து வந்து ₹30 ஆயிரம் பணம் கொடுத்தால்  விட்டுவிடுகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் கருணாநிதி என்னிடம் அவ்வளவு பணம் இல்லை  என்று கூறியுள்ளார்.

உடனே 3 பேரும் உருட்டுக்கட்டையால் கருணாநிதியை சரமாரியாக அடித்து உதைத்து பணம் கேட்டு உள்ளனர். இதை பார்த்த  பொதுமக்கள் பாண்டிபஜார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே, போலீசார் வந்து தாக்குதல் நடத்திய 3 நபர்களை பிடித்தனர். அதில் ஒருவர் நான் சிபிஐ அதிகாரி என்று போலீசாரை மிரட்டினார்.இதனால் சந்தேகமடைந்த போலீசார் 3 பேரையும் பிடித்து வந்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போதுஅவர்கள் கோவில்பட்டி ஜீவாநகர் கதிரேசன் கோவில் தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(31), மயிலாப்பூர் டுமில் குப்பத்தை சேர்ந்த டென்னிஸ்(32), தி.நகர் ராஜபிள்ளை தோட்டத்தை சேர்ந்த கோவிந்த ராஜ்(32) என தெரியவந்தது.சிபிஐ அதிகாரி என கூறிய கோபாலகிருஷ்ணனிடம்போலீசார் ;நடத்திய விசாரணையில்,  அவர் தனியார் கப்பல் நிறுவனத்தில் சமையல் வேலை செய்து வருவது தெரியவந்தது. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிபிஐ அதிகாரி என மிரட்டி பலரிடம் பல லட்சம் ரூபாய் பணம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போலி சிபிஐ அதிகாரி கோபாலகிருஷ்ணன் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த டென்னிஸ், கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் மீதும் கூட்டுச்சதி, மோசடி, அரசு பதவியை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார், போலி சிபிஐ அதிகாரிக்கான அடையாள அட்டை, 3 செல்போன்கள், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் சமீபகாலமாக போலி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக, மிரட்டியும் லட்சக்கணக்கில் பணம் பறித்து வரும் சம்பவம் அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: