சென்னை: கலைஞரின் மனசாட்சியாக இருந்த முரசொலி மாறன் படம், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் தயாநிதி மாறன் வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. முரசொலி மாறன் படத்திற்கு, கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர், முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறனிடம் வாழ்த்து பெற்றார். அப்போது அவர் ஸ்டாலினுக்கு இனிப்பு வழங்கினார்.
