டெல்லி: இந்தியாவில் வாழ்வதற்கு தகுந்த மெட்ரோ நகரங்கள் பட்டியலில் சென்னை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சிறந்த சுகாராத வசதிகள் உள்ள நகரங்களில் திருச்சியும், சிறந்த குடிநீர் வினியோகம் கொண்ட வசதிகளில் ஈரோடும் முதல் இடம் பெற்றுள்ளது. மத்திய நகர்புற வளர்ச்சி துறை அமைச்சகம் முதல் முறையாக இப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி 40 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள மெட்ரோ நகரங்கள் பிரிவில் கிரேட்டர் மும்பை முதல் இடத்திலும், சென்னை இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. சூரத் மூன்றாவது இடத்திலும், பெங்களூரு ஆறாவது இடத்திலும், தலைநகர் புதுடெலலி ஏழாவது இடத்திலும் இருக்கின்றன. ஒட்டுமொத்த நகரங்கள் பட்டியலில் மகாராஷ்டா மாநிலம் புனே முதல் இடத்திலும், நவிமும்பை இரண்டாவது இடத்திலும் கிரேட்டர் மும்பை மூன்றாவது இட்ததிலும் இருக்கின்றன.