திருச்சி: கர்நாடக அணைகள் நிரம்பியதால் திறக்கப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. கடந்த மாதம் 19ம் தேதி மேட்டூரில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வினாடிக்கு லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் 2வது முறையாக நிரம்பியது. மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட நீர் திருச்சி முக்கொம்பு வந்தடைந்ததும் காவிரி ஆற்றில் 30 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் லட்சம் கன அடி வரையும் திறக்கப்பட்டது. கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட நீர், வீணாகக் கடலுக்குச் செல்லவே வாய்ப்புகள் அதிகம்.
2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை காவிரியில் வெள்ள பெருக்கெடுத்து வீணாக கடலுக்கு போகும் உபரிநீரை ஆண்டு முழுவதும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளுக்கு பயன்படுத்த வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். உபரிநீரை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக அரசு அறிவித்த மேட்டூர்- சரபங்கா- அய்யாறு இணைப்பு பாசன திட்டம், காவிரி - மணிமுத்தாறு - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேட்டூர்- சரபங்கா- அய்யாறு இணைப்பு பாசன திட்டத்தை நிறைவேற்ற மறைந்த முதல்வர் எம்ஜிஆர் ஆட்சியில் 11.8.1994ல் ரூ.390 கோடியில் நிறைவேறு வதற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்டது.
அதன் பின் விஜயராகவன் குழு பரிந்துரைப்படி தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 17.04.2013ல் சட்டமன்ற கூட்ட தொடரின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பொதுப்பணித்துறை நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.1,134 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. திட்டத்துக்கான விரிவான ஆய்வு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.50 லட்சத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி சேலம் வடிகால் அமைப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் மூலம் ஆய்வு பணிகள் நடைபெறும் என்ற அறிவிப்பும் கிணற்றில் போடப்பட்ட கல்லானது இதேபோல் காவிரி, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தில் முதல் கட்டமாக கரூர் மாவட்டம் மாயனுார் காவிரி கட்டளை கதவணை பகுதியில் இருந்து மணிமுத்தாறு வரையிலும், இரண்டாவது கட்டமாக மணிமுத்தாறில் இருந்து குண்டாறு வரையிலும், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் 258 கிலோ மீட்டர் துாரம் கால்வாய் வெட்டவும் ஆய்வு பணிகள் நடத் தப்பட்டது.2011, 2012ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ரூ.5,166 கோடி திட்ட மதிப்பில் முதல் கட்டமாக மாயனுாரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 178 கி.மீ துாரமும், இரண்டாம் கட்டமாக விருதுநகர் மாவட்டம் குண்டாறு வரை 180 கி.மீ துாரமும் கால்வாய் வெட்ட முடிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக மாயனுாரில் காவிரியின் குறுக்கே ரூ.236 கோடியில் புதிய கதவணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இணைப்பு கால்வாய் வெட்டும் திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த 2 திட்டங்களை நிறைவேற்றினால் மழை வெள்ள காலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் உபரிநீரை ஆண்டு முழு வதும் வறட்சிக்குள்ளாகும் பகுதிகளுக்கு கொண்டு செல்லலாம். நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவ சாயத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் உணவு தானிய உற்பத்தி பெருகும். லட்சக் கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆயிரக்கணக்கான கிராமங்களில் தலை விரித்தாடும் குடிநீர் பஞ்சம் தீரும். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் கூறுகையில்,கடந்த 2013ல் தமிழகத்தில் மழை பொய்த்து போனதால் மேட்டூர் அணை வறண்டு போனது. ஜுலையில் கர்நாடகாவில் பெய்த பெரும் மழையால் கர்நாடகா அணை கள் அனைத்தும் முழு கொள்ளளவு நிரம்பி அணைகளை பாதுகாப்பதற்காக கர்நாடக அரசு திறந்து விட்ட உபரிநீர் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை தாண்டி காவிரி-கொள்ளிடம் வழியாக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒரு வாரம் கடலுக்கு வீணாக சென்றது. இதே போன்று கடந்த 1994ல் 47,888 டிஎம்சி, 1997ல் 21.863 டிஎம்சி, 1999ல் 19.153 டிஎம்சி, 2000ல் 92.923 டிஎம்சி, 2005ல் 142.513 டிஎம்சி, 2006ல் 612 டிஎம்சி, 2007ல் 74.582 டிஎம்சி, 2010ல் 12.5 டிஎம்சி, 2013ல் 25 டிஎம்சி, 2015ல் 20 டிஎம்சி என தண்ணீர் விரயமாக கடலுக்கு சென்றுள்ளது. 2016ல் பருவமழை பொய்த்து போனதாலும், கர்நாடகா காவிரியில் தண்ணீர் விட மறுத்ததாலும் காவிரி பாசன பகுதிகளில் 140 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. காவிரி நீருக்காக 100 ஆண்டு காலமாக போராடியும் 460 டிஎம்சிக்கு மேல் பயன் படு த்தி வந்த தமிழகம், தற்போது 177.25 டிஎம்சி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முப்போகம் விளைந்த பூமி ஒரு போக்கத்திற்கே தடுமாறுகிறது. கடந்த 3,4 ஆண்டு களுக்கு ஒரு முறை இயற்கை அன்னை வழங்கும் நீரை வாய்ப்புகள் இருந்தும் பயன் படுத்த முடிய வில்லை. இந்த தலைமுறைக்காக மட்டுமல்ல. எதிர்கால சந்ததியி னரின் நலன்களையும் கவனத்தில் கொண்டு தமிழகத்தில் வீணாக கடலுக்கு போகும் உபரிநீரை பயன்படுத்த கடந்த 25 வருடமாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த 2 திட்டங்களை நிறை வேற்றினால் கடலுக்கு செல்லக்கூடிய உபரிநீரை முழுவதும் தடுக்கலாம் என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி