ஆசிய கோப்பை ஏரோபிக் ஜிம்னாஸ்டிக் இந்திய அணி சென்னையில் தேர்வு

சென்னை: ஆசிய கோப்பை ஏரோபிக் ஜிம்னாஸ்டிக் தொடருக்கான இந்திய அணி சென்னையில் நேற்று அறிவிக்கப்பட்டது.ஆசிய அளவிலான  ஏரோபிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன் போட்டி  மங்கோலியா தலைநகர் உலன்பாட்டரில் அடுத்த மாதம் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியை ஆசியன் ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம்  நடத்துகிறது. இந்த தொடருக்கான  இந்திய அணி தேர்வு முகாம்  முதல்முறையாக சென்னையில் நடைபெற்றது. இதில் குஜராத் , மணிப்பூர், மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும்,  ராணுவம்,  விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றை சேர்ந்த 50 சர்வதேச ஜிம்னாஸ்டிக் வீரர், வீராங்கனைகள் சர்வதேச ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற நடுவர்கள், பயற்சியாளர்கள்  பங்கேற்றனர்.

சர்வதேச ஜிம்னாஸ்டிக் சங்க கவுன்சில் உறுப்பினரும், இந்திய சங்கத்தின் தலைவருமான கவுசிங் பீடிவாலா,  தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் சங்க நிர்வாகிகள் ஷாரோன் சுவரெஸ், ஜி.பாலா,  களிரி செல்வராஜ்  உள்ளிட்டவர்கள்  இணைந்து, தேர்வு முகாமில் சிறப்பாக செல்பட்ட  இந்திய அணியை தேர்வு செய்தனர். பிரக்ருதி ஷிண்டே, ஹர்ஷில் பட்டேல், அபுஜித் தீரே, அரிஹா பங்கம்பாம், தன்வி கமித், ஷிவகுமார் உட்பட 17பேர் அணியில் இடம்  பெற்றுள்ளனர்.  இவர்கள் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: