சென்னை-வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை - வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வேளாங்கண்ணி - தாம்பரம் இடையே சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்: 06086) அடுத்த மாதம் 5ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது வேளாங்கன்னியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10  மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.அதேபோல், தாம்பரம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரயில் (06087) வருகிற 29ம் தேதி மற்றும் 31 ஆகிய இரு தினங்களில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு,  மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.வேளாங்கண்ணி-தாம்பரம் இடையே சிறப்பு கட்டண ரயில் (06088) அடுத்த மாதம் 1ம் தேதி மற்றும் 6ம் தேதி ஆகிய இரு தினங்களில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது வேளாங்கன்னியில் இருந்து இரவு 11.45 மணிக்கு  புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.சென்னை சென்ட்ரல்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரயில் (06089) வருகிற 30ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 6ம் தேதி ஆகிய இரு தினங்களில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது, சென்னை சென்ட்ரல் ரயில்  நிலையத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

வேளாங்கண்ணி-சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு கட்டண ரயில் (06090) வருகிற 31ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 7ம் தேதி ஆகிய இரு தினங்களில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது வேளாங்கண்ணியில் இருந்து இரவு  11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.நாகர்கோவில்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரயில் (06093) அடுத்த மாதம் 2ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு  வேளாங்கண்ணியை சென்றடையும்.வேளாங்கண்ணி-நாகர்கோவில் இடையே சிறப்பு கட்டண ரயில் (06094) அடுத்த மாதம் 3ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது, வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.05 மணிக்கு  நாகர்கோவிலை சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது.

இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அரக்கோணம் - திருத்தணி சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருத்தணி முருகன் கோயில் ஆடி  கிருத்திகை விழாவை முன்னிட்டு, அரக்கோணம்-திருத்தணி இடையே வருகிற 3ம் தேதி  முதல் வருகிற 7ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.அரக்கோணம்-திருத்தணி  இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், அரக்கோணத்தில் இருந்து காலை 10.30 மணி,  மதியம் 1.05 மணி, 2.50 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும். இந்த ரயில்  புறப்பட்ட 20 நிமிடங்களில்  திருத்தணியை சென்றடையும். அதேபோல்,  மறுமார்க்கமாக, திருத்தணி-அரக்கோணம் இடையே சிறப்பு ரயில், திருத்தணியில்  இருந்து காலை 11 மணி, மதியம் 1.30 மணி, 3.20 மணி ஆகிய நேரங்களில்  இயக்கப்படும். இந்த ரயில்கள், திருத்தணியில் இருந்து  புறப்பட்ட 20  நிமிடங்களில் அரக்கோணத்தை சென்றடையும், என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: