உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு எது என்ற கேள்வி எழும் முன்பே பலரும்…. சீனா, இந்தியா…… பட்டென்று சொல்லிவிடுவார்கள். கடந்த வார நிலவரப்படி முதலிடத்தில் உள்ள சீனா 141.48 கோடியையும், 2வது இடத்தில் உள்ள இந்தியா 135.35 கோடியையும் தாண்டி விட்டன. மேலும் 3வது இடத்தில் உள்ள அமெரிக்காவில் மக்கள் தொகை 32.66 கோடி தான். இதில் சீனாவும், அமெரிக்காவும் இந்தியாவை விட பல மடங்கு நிலப்பரப்பை கொண்டுள்ளன. முக்கியமாக தங்கள் இயற்கை வளங்களை காப்பதில் கவனமாக இருக்கின்றன. இந்தியா இரண்டிலும் பின் தங்கியுள்ளன. ஒருவேளை இந்தியாவில் இருந்து பாகிஸ்தான், வங்காளதேசம் பிரியாமல் இருந்திருந்தால் நிலப்பரப்பு கொஞ்சம் கூடியிருக்கும். ஆனால் மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சியிருப்போம்.
ஆம் இன்றைய நிலவரப்படி இந்தியா (135.35 கோடி), பாகிஸ்தான்(20.06கோடி), வங்காளதேசம்(16.69கோடி) என மொத்தம் சேர்ந்திருந்தால் 172.04கோடியாக இருந்திருக்கும். இந்த 3 நாடுகளில் மட்டுமல்ல கண்ட அளவில் பார்த்தாலும் உலக அளவில் ஆசிய கண்டத்தில்தான் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. முதல் 20 நாடுகளில் பெரும்பான்மையான நாடுகள் ஆசிய நாடுகள்தான். அடுத்த இடங்களில் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் வட, தென் அமெரிக்க நாடுகள் இருக்கின்றன. மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பற்றாக்குறைக்காக எதிர்காலத்தில் சண்டை நடந்தால் அது நீருக்காக மட்டுமல்ல நிலத்திற்காகவும் நடக்கலாம்…
கண்டங்கள் வாரியாக மக்கள் தொகைவரிசை எண் கண்டம் மக்கள் தொகை (கோடியில்) முதல் இடத்தில் உள்ள நாடு முதல் இடத்தில் உள்ளநகரம்1 ஆசியா 443.67 சீனா கிரேட்டர் டோக்கியா (ஜப்பான்)2 ஆப்ரிக்கா 121.66 நைஜீரியா லகோஸ் (நைஜீரியா)3 ஐரோப்பா 73.80 ரஷ்யா இஸ்தான்புல் (துருக்கி)4 வடஅமெரிக்கா 57.92 அமெரிக்கா நியூயார்க் (அமெரிக்கா)5 தென்அமெரிக்கா 42.25 பிரேசில் சா பவுளா (பிரேசேில்)6 ஒசினியா 39.91 ஆஸ்திரேலியா சிட்னி (ஆஸ்திரேலியா)7 அண்டார்டிகா கோடை காலங்களில் தற்காலிகமாக வெளிநாட்டினர் சுமார் 1200 பேர் தங்குகி்ன்றனர்.
அதிக மக்கள் தொகை உள்ள நாடுகள்1. சீனா- 141,48,49,7962. இந்தியா- 135,35,22,4443. அமெரிக்கா- 32,66,84,7684. இந்தோனேசியா- 26,66,95,1985. பிரேசில்- 21,08,11,8156. பாகிஸ்தான்- 20,06,78,0947. நைஜீரியா- 19,56,96,3738. வங்காளதேசம்- 16,63,07,7119. ரஷ்யா- 14,39,65,59610. மெக்சிகோ- 13,07,02,23211. ஜப்பான்- 12,71,95,91212. எத்தியோப்பியா- 10,74,42,54313. பிலிப்பைன்ஸ்- 10,64,55,22014. எகிப்து- 9,93,10,62615. வியட்னாம்- 9,64,57,33316. டி.ஆர்.காங்கோ17. ஜெர்மனி- 8,22,87,10418. ஈரான்- 8,19,81,52319. துருக்கி- 8,18,75,08720. தாய்லாந்து- 6,91,78,010
- இராதிகாதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!