பெரியாறு அணை வாகன நிறுத்தம் வழக்கு ஜூலை 20ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி: முல்லை பெரியாறு அணைக்கட்டு பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தம் கட்டுவதற்காக கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கேரளாவை சேர்ந்த தங்கப்பன், ஆபிரகாம் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்தனர். தமிழக அரசும்  இந்த வழக்கில் மனு தாரராக இணைந்தது.

 தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் உமாபதி தரப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அமர்வின் முன்னிலையில் நேற்று ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “முல்லை பெரியார் அணைப் பகுதியில் வாகன நிறுத்தம் கட்டுவது தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்’’ என அதில் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள் அதுகுறித்து ஜூலை 20ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என நேற்று உத்தரவிட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: