மூக்கில் இருந்து ரத்தம் வருவது ஏன்?

மூக்கில் இருந்து ரத்தம் வந்தால் தலையை முன்பக்கமாக சற்றே குனிந்து தலையை வைத்து கொள்ள வேண்டும். பின்பக்கம் சாயக்கூடாது. அவ்வாறு செய்தால் மூக்கில் உள்ள ரத்தம் தொண்டை வழியாக வயிற்றுக்குள் சென்றுவிடும். இதனால் வாந்தி உணர்வு ஏற்பட்டுவிடும். முன்பக்கம் சாயும்போது மூக்கினுள் உள்ள ரத்தம் வெளியேறிவிடும். பின்பு கட்டைவிரல் ஆட்காட்டி விரலால் மூக்கைமூடி கொண்டு மூக்கின் மையப்பகுதியில் எலும்பு முடியும் பகுதிக்கு சற்று கீழே விரல்களை வைத்து அழுத்த வேண்டும்.

5முதல் 10நிமிடம் இவ்வாறு செய்தால் ரத்தம் நின்று விடும். ரத்தம் நிற்காவிட்டால் மூக்கின் மேல் ஒரு மெல்லிய துணியில் ஐஸ்கட்டியை வைத்தால் ரத்தம் வடிவது நின்று விடும். ரத்தம் நின்றதும் மூக்கைப்பிடித்து திருப்பவோ, சீந்தவோ கூடாது. இதுபோன்ற செய்கையினால் ரத்தம் மீண்டும் வர வாய்ப்புள்ளது. மூக்கின் வறட்சி, உயர்ரத்த அழுத்தத்தினால் மூக்கின்வழியே ரத்தம் வருகிறது. தமனி கெட்டிப்பட்டு விடுவதனால் ரத்தத்தின்அடர்த்தி குறைவதாலும் இதுபோன்று ரத்தம் வெளியேறும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: