தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிப்பட்டி: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சூறாவளிக்காற்றுடன் 1 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் குமுளி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து  ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதே போல மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் அடி, மின்னல் தாக்கியதில் செல்போன் டவர், மின்கம்பம் மற்றும் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதனால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், மதகுப்பட்டி, நாட்டரசன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்தது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: