நவீன இந்தியாவை கட்டமைப்பதில் பெரும் பங்காற்றிய ராஜாராம் மோகன் ராயை டூடுல் மூலமாக கெளரவித்தது கூகுள்

டெல்லி : நவீன இந்தியாவை கட்டமைப்பதில் பெரும் பங்காற்றிய ராஜாராம் மோகன் ராயின் 246வது பிறந்த நாளை கூகுள் தனது டூடுல் மூலமாக கொண்டாடி வருகிறது. இந்தியாவில் மண்டிக்கிடந்த மூடப்பழக்க வழக்கங்களை கலையெடுப்பதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியவர் ராஜா ராம் மோகன் ராய்.  குறிப்பாக கணவன் இறந்த பிறகு மாணவி உடன்கட்டை ஏற வேண்டும் என்ற சமூக அவலத்தை போக்க இவர் மேற்கொண்ட போராட்டங்கள் எண்ணற்றவை.

ராஜா ராம் மோகன் ராய் வங்காளத்திலுள்ள ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள ராதாநகர் என்ற கிராமத்தில் மே 22, 1772 ம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை, ராம்காந்தோ ராய், ஒரு வைஷ்ணவர் மற்றும் அவரது தாய் தாரிணி, சைவம் மதம் பின்னணியில் இருந்து வந்தவர்.சமூகத்தில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டு வெகுண்டெழுந்த அவர், 1814ல், சமுதாயத்தில் சமூக மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் முயற்சியாக ‘ஆத்மிய மக்களவை’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். பின்னர், பெண்கள் உரிமைக்காகவும், விதவைகள் மறுமண உரிமைக்காகவும், பெண்களுக்கான சொத்து உரிமைக்காகவும், பல பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அவர் அக்காலத்தில் பெண்களுக்கு கட்டாய பழக்கமாக இருந்த  உடன்கட்டை ஏறுதல் மற்றும் பலதார மணம் புரிதல் போன்ற நடைமுறைகளைத் தீவிரமாக எதிர்த்தார்.

பெண்களுக்கானக் கட்டாயக் கல்வி முறைக்குப் பெரிதும் ஆதரவு காட்டிய அவர், பாரம்பரிய இந்திய கல்வி முறையை விட ஆங்கில மொழி கல்வி மேன்மையானது என்று நம்பினார், அதுமட்டுமல்லாமல், சமஸ்கிருதம் கற்றுத் தரும் பள்ளிகளில், அரசாங்க நிதிகளை பயன்படுத்தக் கூடாது என்று மிகக் கடுமையாக எதிர்த்தார். பின்பு அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக, பிரிஸ்டல் அருகிலுள்ள ஸ்டேபிள்டன் என்ற இடத்தில் செப்டம்பர் 27, 1833 அன்று காலமானார்.இந்நிலையில்  நாட்டில் பெண்ணுரிமைக்காகப் போராடி, சதியை ஒழித்த அந்த மாபெரும் சீர்திருத்தவாதியை  கெளரவிக்கும் விதமாக கூகுள் தனது டூடுலை வடிவமைத்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: