குஜராத் ஆம் ஆத்மி தலைவராக இசுதன் காட்வி நியமனம்

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 182 இடங்களில் 181 ல் போட்டியிட்டது. ஆனால் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். குஜராத் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இசுதன் காட்வியும் கம்பாலியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 12.6 சதவீத வாக்குகளை பெற்றது. இந்நிலையில் குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவராக இசுதன் காட்வியை நியமித்து கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. மாநில தலைவராக இருந்த கோபால் இடலியா தேசிய இணை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். மேலும் 6 மண்டலங்களுக்கான கட்சியின் செயல் தலைவர்களையும் நியமித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்….

The post குஜராத் ஆம் ஆத்மி தலைவராக இசுதன் காட்வி நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: