மகாராஷ்டிராவில் பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் : மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை 37ஆக உயர்வு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்ரோலி மாவட்டத்தில் உள்ள தட்காவ்ன் வனப் பகுதியில், மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவோயிஸ்ட் வேட்டையில் சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ படையினர், தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, பாம்ராகாட் என்ற இடத்தில் பதுங்கியிருந்த  மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரை  நோக்கி, மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில், 14 மாவோயிஸ்ட்கள்  சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் உடல்களை மீட்டுள்ள காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தப்பிச்ச சென்ற மாவோயிஸ்டுகளை பிடிக்க, தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியது. இந்த தேடுதல் வேட்டையில் நேற்று வரை 22 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தன.இந்நிலையில் என்கவுன்டர் நடந்த கட்ச்ரோலி இந்திராவதி ஆற்றில் இருந்து மேலும் 15 மாவோயிஸ்டுகளின் உடல்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Related Stories: