ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!!: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

ஜப்பானின் ஃபுகுஷிமா கடற்கரை அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவு கோலில் அதிர்வு 7.4 ஆக பதிவான நிலையில், சுமார் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக ஒரு மீட்டர் தூரம் வரை சுனாமி அலைகள் எழும்பியுள்ளன. மேலும் கட்டிடங்களில் அதிர்வு உணரப்பட்டு, மரசாமான்கள் பல சேதமடைந்தன. சாலையில் மின்கம்பங்களும் பெயர்ந்து விழுந்ததோடு, சிரோஷியில் புல்லட் ரயில் தடம் புரண்டது. இதைத்தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் பியூமியோ கிஷிடா, நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் 90க்கு மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்ததாகவும் தெரிவித்தார்.

The post ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!!: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு appeared first on Dinakaran.

Related Stories: