எகிப்தில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு: பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறைக்கான பாதையா?

எகிப்து நாட்டின் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை இருப்பதாக கூறப்படும் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சுரங்கப்பாதை பண்டைய தபோசிரிஸ் மாக்னா கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் வடக்கு கடற்கரையில் 4,300 அடி நீளமுள்ள பாறையில் செதுக்கப்பட்ட சுரங்கப்பாதை எகிப்திய தொமிடிக்கன் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை 6.5 அடி உயரம் கொண்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையில் கிளியோபாட்ரா மற்றும் மார்க் ஆண்டனி ஆகியோர் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அகழ்வாராய்ச்சியில் பல பீங்கான் ஜாடிகள், பானைகள், சேறு மற்றும் மணல் வண்டல்களுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The post எகிப்தில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு: பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறைக்கான பாதையா? appeared first on Dinakaran.

Related Stories: