கீவ்: ரஷ்யா மற்றும் உக்ரைனின் பிடிவாதத்தால் தற்காலிக போர் நிறுத்தத்தில் எதிர்பார்த்தபடி பொது மக்கள் வெளியேற முடியாதா நிலை ஏற்பட்டது. மரியுபோல் , வேணவக்கொ ஆகிய நகரங்களில் ரஷிய படைகள் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது படையெடுத்திருக்கும் ரஷ்ய படைகள் 10 நாட்களில் அந்நாட்டின் 3 பக்கங்களையும் சுற்றிவளைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை சுற்றிவளைத்த ரஷ்ய படைகள் நேற்றைய தினம் பொதுமக்கள் வெளியேற மனிதாபிமான அடிப்படையில் 6 மணி நேரம் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்தன. சாலைகள், மேம்பாலங்கள் குண்டு வீச்சில் தகர்க்க பட்டதால் பொதுமக்கள் நடந்தே வெளியேற முற்பட்டன. ஆனாலும் எதிர்பார்த்த அளவில் மக்கள் வெளியேற்றம் நடைபெறவில்லை. அறிவிப்பை மீறி ரஷ்ய தாக்குதல் நடத்துவதாகவும், உக்ரைன் படைகள் மக்களை வெளியேற விடாமல் தடுப்பதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டினார். இதனிடையே உக்ரைனில் தங்கள் படைகள் 2 ஆயிரம் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மிகப்பெரிய நகரமான கெர்ஷானில் உள்ள ராணுவத்தளம் முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதற்காக ரஷ்யா வீடியோ வெளியிட்டது. வெளிநாட்டவர்களை மீட்க 100க்கும் மேற்பட்ட பேருந்துகளை ஏற்பாடு செய்ததாகவும், ஆனால் உக்ரைன் ராணுவம் மக்களை தடுத்து வைத்தாக ரஷ்ய தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. துறைமுக நகரமான மரியுபோல் முழுவதுமாக ரஷ்யா வசம் செல்லம் தடுக்கவே உக்ரைன் ராணுவம் மக்களை தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே போர் நிறுத்த காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது. …
The post ரஷ்யா மற்றும் உக்ரைனின் பிடிவாதத்தால் தற்காலிக போர் நிறுத்தத்தில் பயன் இல்லை: அறிவிப்பை மீறி ரஷ்யா குண்டுகளை வீசியதாக உக்ரைன் புகார்; பொதுமக்களை உக்ரைன் தடுப்பதாக ரஷ்யா குற்றசாட்டு appeared first on Dinakaran.