ஐநாவில் பாக். தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களிப்பு

ஐநா: பிராந்திய அளவில் ஆயுதங்கள் கட்டுப்பாடு தொடர்பாக ஐநாவில் பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. பிராந்திய அளவில் ஆயுத கட்டுப்பாடுகளை கொண்டு வருவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொது சபையின் முதல் குழுவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் இணைந்து தீர்மானத்தை கொண்டு வந்தன.

பிராந்திய மோதல்களைத் தடுப்பதில் வழக்கமான ஆயுதங்களை (பீரங்கிகள், துப்பாக்கிகள் மற்றும் பிற ராணுவ உபகரணங்கள் போன்றவை) நிர்வகிப்பது அவசியம் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிராந்திய பாதுகாப்பிற்காக ராணுவ பலம் கொண்ட நாடுகள் சிறப்புப் பங்கு வகிக்கின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 179 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. இஸ்ரேல் வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்தை எதிர்த்து இந்தியா மட்டும் வாக்களித்தது.

The post ஐநாவில் பாக். தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களிப்பு appeared first on Dinakaran.

Related Stories: