நியூயார்க்: அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு உலக தலைவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதே போல, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, புளோரிடாவின் பால்ம் பீச்சில் உள்ள டிரம்பின் பங்களாவுக்கு போன் செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, டிரம்ப் தன்னுடன் இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க்கிடம் போனை கொடுத்துள்ளார். உக்ரைன் அதிபருடன் போனில் பேசிய மஸ்க் எங்களின் உதவி எப்போதும் போல் தொடரும் என கூறியதாக கூறப்படுகிறது.
அதிபர் தேர்தலில் டிரம்புக்கு மஸ்க் ஆதரவு தெரிவித்து தீவிர பிரசாரம் செய்தார். பல ஆயிரம் கோடி பணத்தை செலவு செய்தார். இதனால், தனது புதிய அரசு நிர்வாகத்தில் மஸ்க்குக்கு முக்கிய பதவி தர டிரம்ப் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அதை நிரூபிக்கும் வகையில், வெளிநாட்டு தலைவருடன் போனில் பேச வைத்து மஸ்க் உடனான நெருக்கத்தை டிரம்ப் வெளிப்படுத்தி உள்ளார்.
The post வாழ்த்து தெரிவித்து உரையாடல்: டிரம்ப்-உக்ரைன் அதிபர் பேச்சில் இணைந்த மஸ்க் appeared first on Dinakaran.