இதில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்ய கனடா பிரதமர் தலைமையில் நேற்று அமைச்சரவை ஆலோசனை நடந்தது. இதன் அடிப்படையில் கனடா-அமெரிக்கா இடையே வர்த்தக பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய நிதியமைச்சரும், துணைபிரதமருமான கிறிஸ்டியா ப்ரீலேண்ட் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கனடா நாட்டின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். டிரம்ப் முதல்முறை அமெரிக்க அதிபராக இருந்த போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பலவீனமானவர், நேர்மையற்றவர் என்று விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
* கனடா பிரதமர் தேர்தலில் தோற்றுவிடுவார் எலான் மஸ்க் கணிப்பு
கனடாவில் அடுத்த ஆண்டு பிரதமர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையே மோதல் குறித்தும், கனடா தேர்தலில் அமெரிக்காவின் நிலை என்ன என்பது குறித்தும் உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,’ வரும் தேர்தலில் கனடா பிரதமர் தோற்றுவிடுவார். அவருக்காக நாங்கள் எதையும் செய்யத்தேவை இல்லை’ என்று குறிப்பிட்டார்.
The post டிரம்ப் வெற்றியால் கவலையில் கனடா: பிரச்னைகளை ஆராய குழு appeared first on Dinakaran.