ஈசனின் ராத்திரி சிவராத்திரி

மனித குலத்தில் எப்படி பிறந்த நாள், திருமண நாள் கொண்டாடுகிறோமோ, அதே போன்று இறைவனுக்கும் சில முக்கிய நாட்கள் உண்டு.அம்பிகைக்கு நவராத்திரி, பெருமா ளுக்கு வைகுண்ட ஏகாதசி, சிவனுக்கு மகா சிவராத்திரி சிறப்பு வாய்ந்த நாட்களாகும். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! திருசிற்றம்பலம் திருசிற்றம்பலம்!இந்த உலகத்தை உருவாக்கியவர் சிவபெருமான். அவர் இரக்கத்தின் சின்னமாக விளங்கி படைத்தல், காத்தல், அழித்தல் என்பதில் அழித்தல் தொழிலை ஏற்று இருப்பவர் ஈசன்.ஆனால் இவரை எளிதில் சந்தோஷப்படுத்த  முடியும். நமக்குள் இருக்கும் பயத்தைப் போக்க சிவ மந்திரங்களை படிக்கலாம். சிவ மந்திரத்தை உச்சரிப்பதால் நோய்களில் இருந்து விடுபட்டு, பயம் மற்றும் கவலைகள் பறந்து நம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடையமுடியும் சிவ மந்திரங்கள்  தொடர்ந்து உச்சரிப்பதால் வெற்றியும் காரிய சித்தியும் நமக்கு வாய்க்கும். ஒரு மனிதனின் ஆழ்மனது வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் சக்தி சிவ மந்திரத்திற்கு அதிகம்  உண்டு. உடல், மனம் ஆன்மா என்று சகலத்தையும் கட்டுப்படுத்தி  சுத்தம் செய்யும் தன்மை இந்த மந்திரங்களுக்கு உண்டு. மனித வாழ்வில் அன்றாடம் கடந்துவரும், மன அழுத்தம், சோர்வு, தோல்வி, புறக்கணிப்பு, மற்றும் இதர எதிர்மறை ஆற்றல்கள் ஆகியவற்றைப் போக்க இந்த மந்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும். ஒரு தனி நபர், உடலளவிலும் மனத்தளவிலும் மிகவும் சோர்வாக விரக்தியாக ஆற்றல் இழந்து இருக்கும்போது சிவமந்திரங்களை உச்சரித் தால் மாற்றம் ஏற்படும். பிறந்த ஜாதகத்தில் உள்ள எதிர்மறை ஆற்றலைப் போக்கும் சக்தி சிவமந்திரத்திற்கு  உண்டு. சிவபெருமானுக்கு பல மந்திரங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு தனி நன்மைகள் உண்டு. சில மந்திரங்களைபற்றி நாம் இந்த கட்டுரையில் காணலாம்.பஞ்சாக்ஷர சிவமந்திரம்:ஓம் நமசிவாய சிவபெருமானை போற்று வதில் இந்த மந்திரம் அனைவராலும் அறியப்பட்டது. “நான் சிவபெருமையை வணங்குகிறேன்” என்பது இதன் பொருளாகும். இந்த மந்திரத்தை நாள்தோறும்  108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைந்து ஈசனின்  ஆசிர்வாதம் கிடைக்கிறது.ருத்ர மந்திரம்:ஓம் நமோ பகவதே ருத்ராயா  இது ருத்ர மந்திரமாகும். ஈசனின்  ஆசிகளைப் பெற இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதை நாள்தோறும் சொல்வதால் நம்முடைய  விருப்பத்தின் நிறைவேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.  சிவ காயத்ரி மந்திரம்:ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் இந்து மதத்தில், காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும். சிவகாயத்ரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மனஅமைதிக்காகவும் இறைவன் அருளைப் பெறவும் நாள்தோறும்  இந்த மந்திரத்தை சொல்லலாம்.சிவா தியான மந்திரம்:கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம் விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ ஜய ஜய கருணாப்தே ஸ்ரீமஹாதேவ ஷம்போநாம்  அன்றாடம் தெரிந்தோ தெரியாமலோ செய்கின்ற எல்லா பாவச் செயல்களிலுமிருந்து நம்மை விடுவிக்க கோரி ஈசனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் அழிக்கும் கடவுளாக சிவபெருமான் இருப்பதால் மனிதனின் மரணத்தை  குறித்த பயத்தைப் போக்கவும் அவரே உரியவர். ஆகவே மகா மிருத்யுஞ்சய் மந்திரம் இந்த பலனை நமக்கு அளிக்கும்.ஏகதசா ருத்ர மந்திரம் இது 11 மந்திரங்கள் அடங்கிய ஒரு ஜெபம் ஆகும். இறைவன் சிவ பெருமானை வெவ்வேறு வடிவங்களில் வழிபட இந்த மந்திரங்கள்  பயன்படுகிறது. வருடத்தில் உள்ள மாதங்களைக் குறிக்கும் ஒரு மந்திரமாக இது விளங்குகிறது. இந்த மந்திரத்தை நன்றாக  உச்சரிப்பதால் நல்ல பலனை பெறுவீர்கள். ஆனால் எல்லா 11 மந்திரங்களையும் சேர்த்தும் சொல்லலாம். சிவராத்திரி அன்று மகா ருத்ர யக்னம் நடைபெறும்போது இந்த பதினோரு மந்திரங்களையும் உச்சரிப்பது  நமக்கு  அனைத்து விதமான நல்ல மிகுந்த பலனைத் தரும். “ஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் பத்” பிங்களா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சர்வ மங்கலாய பின்கலாய ஓம் நமஹா ஆன்மிக பலன் வாசகர்கள் அனைவரும் வரும் பிப்ரவரி 17 ம் நாள்  மஹாசிவராத்திரி  அன்று ஈசனை வழிபட்டு அவன் அருள் கிடைக்க  சம்போ மஹாதேவா என்று நாம் வழிபடுவோம்.(அருள் பெருகும்)குடந்தை நடேசன்…

The post ஈசனின் ராத்திரி சிவராத்திரி appeared first on Dinakaran.

Related Stories: