ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விடிய விடிய நடந்தது

தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா, ஆதியோகி சிலை முன்பு நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு (ஜக்கி வாசுதேவ்) முன்னிலையில், லிங்க பைரவி தேவியின் ஊர்வலம் மற்றும் தியான லிங்கத்தில் பஞ்சபூத க்ரியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, லிங்க பைரவி தேவிக்கு மஹா ஆரத்தியும், மஹா யோக வேள்வியும் நடைபெற்றது. விழாவில் சத்குரு பேசுகையில், மஹா சிவராத்திரி என்பது சிவனின் அருளை பெறுவதற்கு உகந்த ஒரு மகத்தான இரவாகும். இதை ஓரு குறிப்பிட்ட மதம் சார்ந்த அல்லது நம்பிக்கை சார்ந்த விழாவாக பார்க்கக்கூடாது. படைத்தலின் மூலமான சிவனின் எல்லையில்லா வெறுமையின் தீவிரத்தை கொண்டாடும் நாள். இன்று கோள்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக மனிதர்களின் உயிர் சக்தியானது இயற்கையாகவே மேல் நோக்கி நகரும். ஆகவே, இன்றைய இரவு முழுவதும் முதுகு தண்டை நேராக வைத்து கொண்டு விழிப்பாகவும் விழிப்புணர்வாகவும் இருந்தால் நீங்கள் அளப்பரிய பலன்களை பெற முடியும்.  ஆரோக்கியம், நல்வாழ்விற்கு மட்டுமின்றி ஒருவரின் முக்திக்கும் இந்நாள் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றார்.முன்னதாக இந்திய பாரம்பரியத்தை பறைச்சாற்றும் விதமாகவும், மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்திருக்கவும் தமிழ் நாட்டுப் புற பாடகர் அந்தோணி தாசனின் பாடல்களுடன், பறை இசை குழுவினரின் பறையாட்டம், உட்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சத்சங்கம், ஆதியோகி திவ்ய தரிசன காட்சி நடந்தது. பாரம்பரிய  நாட்டு மாடுகளுக்கு, சத்குரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  கொரோனா பரவல் காரணமாக பிரபலங்கள் யாரும் நேற்று பங்கேற்கவில்லை. இணையம் வழியாக முன்பதிவு செய்திருந்த மக்கள் மட்டுமே பங்கேற்றனர். விடிய விடிய நிகழ்ச்சிகள் நடந்தது. முகக்கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்….

The post ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விடிய விடிய நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: