3 வீடுகள், 8 ஏக்கர் நிலம், பண்ணை வீடு; சொத்துகளை தானம் அளித்தார் புலியூர் சரோஜா

சென்னை: தமிழ் சினிமாவில் 1980களில் நடன மாஸ்டர்களில் பிரபலமாக இருந்தவர் பெண் டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாதான். இவர் 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசனின் ஆஸ்தான டான்ஸ் மாஸ்டராகவும் இருந்தார். இவர் நடிகர் ஜி.சீனிவாசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சத்யா என்ற ஒரே ஒரு மகன் இருந்தார். சத்யா விபத்து ஒன்றில் சிக்கி இறந்துவிட உடைந்து போன சரோஜா அந்த துயரத்தில் இருந்து மீண்டு வரமுடியாமல் தவித்தார்.

வளசரவாக்கத்தில் மட்டும் 3 வீடு இருந்தது. 8 ஏக்கர் நிலம், தோட்டம், பண்ணை வீடு, 500 சவரன் தங்க நகை என புலியூர் சரோஜாவுக்கு சொத்துக்கள் இருந்தன. ‘‘எல்லாம் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்து. அப்போது தான், மகன் பெயரில் ஸ்கூல் கட்ட வேண்டும் என நினைத்தேன், கையில் இருந்த பணம், நகையை போட்டு அவன் பெயரிலேயே பள்ளியை கட்டினேன். கடந்த 32 வருடமாக நல்ல படியாக இந்த பள்ளியை நடத்தி வருகிறேன். கடந்த ஆண்டு என் கணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இப்போ எனக்குனு, இந்த ஸ்கூலைத் தவிர யாரும் இல்லை, என் மகனை நினைத்து, இந்த பள்ளியிலேயே வாழ்ந்து வருகிறேன். இந்த ஸ்கூல் ஒன்று தான் என் மனதிருப்தி’’ என கண்ணீருடன் பேசி இருந்தார். இந்நிலையில் மீதம் இருந்த தனது சொத்துக்களை ஏழைகளுக்கு தானம் கொடுத்திருக்கிறார் புலியூர் சரோஜா.

Related Stories: