மும்பை: பாலிவுட் முன்னணி நடிகை ஜான்வி கபூர், தற்போது தென்னிந்திய படவுலகிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் தன்னுடைய தங்கை குஷி கபூருடன் இணைந்து, கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கரண் ஜோஹர், ‘இதுவரை உங்களுக்கு வந்த மெசேஜ்களில், மிகவும் மோசமான மெசேஜ் எது?’ என்று கேட்டார்.
உடனே குஷி கபூரிடம் பேசிய ஜான்வி கபூர், ‘இதற்கு பதில் சொன்னால், என்மீது கோபப்படுவாய் என்று நினைக்கிறேன்’ என்றார். பிறகு கரண் ஜோஹரிடம், ‘உன் உடலில் இருக்கும் எல்லா மச்சங்களையும் நான் பார்க்கலாமா என்று, பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் எனக்கு மெசேஜ் அனுப்பினார்’ என்று அதிரடியாக சொன்னார்.
அவரது பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்த கரண் ஜோஹர், ‘அப்படியா, உனக்கு அவ்வளவு மச்சங்களா இருக்கின்றன?’ என்று கேட்டார். அதற்கு ஜான்வி கபூர், ‘ஆமாம், எனக்கு நிறைய மச்சங்கள் இருக்கின்றன’ என்று பதிலளித்தார். எனினும், அந்த மெசேஜை அனுப்பிய பாலிவுட் நடிகர் யார் என்று ஜான்வி கபூர் சொல்லவில்லை. இதனால், மெசேஜ் அனுப்பிய அந்த நடிகர் யார் என்று, சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
