ஐதராபாத்: வெங்கி அட்லூரி தெலுங்கு, தமிழில் எழுதி இயக்கிய முழுநீள குடும்பக்கதை கொண்ட பொழுதுபோக்கு படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இது வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாகவம்சி, சாய் சவுஜன்யா இணைந்து தயாரித்துள்ளனர்.
ஏற்கனவே ‘பட்டாம்பூச்சி’, ‘நேனோ பட்டர் ஃப்ளை’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் மூலம் ரசிகர் களின் மனதை கவர்ந்திருந்த படக்குழுவினர், தற்போது மற்றொரு உற்சாகமான இசை விருந்தாக ‘தி வெட்டிங் சாங்’ என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். திருமண கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் குடும்ப பாசத்தை வெளிப்படுத்தும் இப்பாடல் காட்சியில் சூர்யா, மமிதா பைஜு உள்பட பலர் இணைந்து ஆடியுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் கென் கருணாஸ் எழுதியுள்ள இப்பாடலை சூர்யா சொந்தக்குரலில் பாடியுள்ளார்.
