மகேஷ் பாபு நடிக்கும் வாரணாசி பிரச்னையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா பட தலைப்பு

ஐதராபாத்: எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் ​பாபு, முன்னாள் உலக அழகியும் மற்றும் பாடகியுமான பிரியங்கா சோப்​ரா, பிருத்​விராஜ் சுகுமாரன் நடித்து வரும் பான்வேர்ல்ட் படம், ‘வாரணாசி’. இ்ந்த தலைப்பை ஏற்​கனவே பதிவு செய்து வைத்​திருப்​ப​தாக சொல்லி, தெலுங்கு இயக்​குனர் சுப்பா ரெட்டி புகார் அளித்தார். ‘இந்த ​தலைப்​பை கடந்த 2023ம் ஆண்டு பதிவு செய்​திருந்தோம். பிறகு கடந்த ஜூலை​யில் புதுப்​பித்​தோம்.

பிறகு எப்​படி இந்ததலைப்பை அவர்கள் பயன்படுத்த முடி​யும்?’ என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​ விட்டது. இதனால், எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்​கி வரும் படத்​துக்கு ‘ராஜமவுலி​யின் வாரணாசி’ என்று தலைப்பை மாற்​றிய​தாக தகவல் வெளி​யானது. இந்​நிலை​யில், திடீரென்று இந்த பிரச்​னைக்கு சுமூகமான தீர்வு ஏற்​பட்​டுள்​ளது.

‘வாரணாசி’ தலைப்புக்கான உரிமையை எஸ்.எஸ்.ராஜமவுலியின் வசம் ஒப்​படைத்​துள்ள சுப்பா ரெட்டி கூறுகையில், ‘எனக்கு மிக​வும் பிடித்த ஒரு நடிகர் மகேஷ் பாபு, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆகியோரின் பிரமாண்டமான ​படத்​துக்கு சிறிய அளவி​லாவது பங்​களிக்க முடிந்ததில் நான் பெரு​மைப்படுகிறேன்.

தரமான ஒரு நல்ல படத்​துக்​காக இந்ததலைப்பை வழங்​கு​வ​தில் நான் மகிழ்ச்​சி​ அடைகிறேன்’ என்றார். தலைப்​பை கொடுக்க எந்த​ பண பரிவர்த்தனை​யும் நடக்க​வில்லை. எஸ்.எஸ்.ராஜமவுலி யின் மீதான அதிக மரி​யாதையின் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக, சுப்பா ரெட்டி கூறினார்​.

Related Stories: