மொழிக்கு மரியாதை கொடுக்கும் ஸ்ரீலீலா

கன்​னடத்​தில் வெளி​யான ‘கிஸ்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரீலீலா, தற்போது தெலுங்கு, தமிழ், இந்​தி, கன்​னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரு​கிறார். தமிழில் சிவ​கார்த்​தி​கேயன் ஜோடி​யாக ‘பராசக்​தி’ என்ற படத்​தில் நடித்​திருந்​தார். தற்​போது தனுஷின் 55வது படத்​தில் நடிக்கும் அவர், இந்​தி​யில் கார்த்திக் ஆர்யன் ஜோடி​யாக நடித்​துள்​ளார். அந்​தந்த மொழிகளில் நடிக்​கும்​போது, அந்தந்த மொழி​யில் பேசுவதுதான் மண்​ணுக்​கும், மக்​களுக்​கும் கொடுக்​கும் மரியாதை என்​றும், அது ரசிகர்​களு​டன் உணர்​வுப்​பூர்​வ​மான பிணைப்பை ஏற்​படுத்​துகிறது என்​றும் அவர் கூறி​யுள்​ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நான் ஒரு பன்மொழி நடிகை என்பதால், ஒவ்​வொரு மொழியை​யும் பெரிதும் மதிக்​கிறேன். நான் பல்வேறு மொழிகளில் நடிக்கிறேன். ஒரு இடத்​துக்கு செல்​லும்​போது, அங்கு மேடையில் இருந்​தால், கண்​டிப்​பாக அந்த மாநில மொழி​யில் பேச முயற்சிக்​கிறேன். அது​தான் நான் அந்த மண்​ணுக்​கும், அவர்​களின் மொழிக்​கும் கொடுக்​கும் உண்மையான மரி​யாதை’ என்றார்.

Related Stories: