கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மீண்டும் தமிழில் நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதில் இளம் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த் நடிக்கிறார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படத்தை எழுதி இயக்கி, பிறகு ‘வித் லவ்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர், மீண்டும் படம் இயக்க விரும்பாமல் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை டிராமா கம்பெனி சார்பில் பாலமுருகன்.அ தயாரிக்கிறார். ஹீரோயினாக ஷிவானி நாகாரம் நடிக்கிறார். கவுதம் சிவராமன் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் நடந்தது.
‘ஹார்ட்பீட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமான யோகலட்சுமி, கானா வினோத், சங்கீதா மாதவன், பெஞ்சமின் நடிக்கின்றனர். சுரேஷ் எடிட்டிங் செய்ய, லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தின் தலைப்பு மற்றும் சுவாரஸ்யமான அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடுகிறது. தந்தை, மகன் பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இவ்வருட இறுதியில் படம் திரைக்கு வருகிறது.
