வருண் தவான், மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்தி ரொமான்டிக் காமெடி படமான ‘ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’, வரும் 5ம் தேதி திரைக்கு வருகிறது. 1999ல் வெளியாகி வெற்றிபெற்ற ‘பிவி நம்பர் 1’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘சுன்னரி சுன்னரி’, ‘இஷ்க் சோனா ஹை’ ஆகிய பாடல்களை இப்படத்தில் அனுமதியின்றி மறுஉருவாக்கம் செய்துள்ளனர். ‘பிவி நம்பர் 1’ என்ற படத்தை இயக்கியவர், மேற்கண்ட படத்தை இயக்கிய டேவிட் தவான் என்றாலும், அப்படத்தை தயாரித்த பூஜா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர்,
தங்கள் அனுமதியின்றி இப்பாடலை பயன்படுத்தியதற்காக, ரூ.400 கோடி நஷ்டஈடு கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இப்படத்தின் வெளியீட்டை நிறுத்த வேண்டும் என்றும், அப்பாடல்களை படத்தில் இருந்தும், அனைத்து விளம்பரங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள தவறினால், கூடுதலாக ரூ.100 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
