பிரச்னை வந்தால்தான் கடவுளை நினைப்பேன்: சூர்யா

சென்னை: சூர்யா, திரிஷா, சுவாசிகா, ஷிவதா நாயர், இந்திரன்ஸ், யோகி பாபு நடித்து, ஆர்ஜே பாலாஜி எழுதி இயக்கியுள்ள `கருப்பு’ என்ற படம் இன்று திரைக்கு வருகிறது. முன்னதாக இப்படத்தின் தெலுங்கு பதிப்பான `வீரபத்ருடு’ குறித்த நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற சூர்யா பேசியதாவது: என்னால் இந்த வாழ்க்கையில் ஒரு வேலையைத்தான் செய்ய முடியும். ஆனால், அவருக்கு பல்வேறு திறமைகள் இருக்கிறது.

ரேடியோ ஆர்ஜே முதல் இயக்குனர் வரை பல வேலைகளை செய்திருக்கிறார். அவர் ஒரு நல்ல நண்பர், நல்ல தந்தை, நல்ல தலைவரும் கூட. அவருடன் நேரத்தை செலவிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். சிரிப்போ, எமோஷனோ அதை சரியாக வாங்குவார். நானும் கடவுள் நம்பிக்கையுள்ள நபர்தான். ஆனால், எனக்கு ஏதாவது பிரச்னை வந்தால்தான் கடவுளை நோக்கி செல்வேன்.

ஆனால், ஆர்ஜே பாலாஜி செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் கடவுளின் கரமும் கூடவே இருக்கும். அதனால்தான் இந்த கதையை மிகவும் நேர்த்தியாக கொடுத்துள்ளார். படத்தின் முதல் பாதி நல்ல கோர்ட் ரூம் டிராமாவாக இருக்கும். இரண்டாம் பாதி செம மாஸ் ஆக இருக்கும். அந்த ஒரு உறுதியை மட்டும் இப்போது நான் கொடுக்கிறேன்.

Related Stories: