மட்டன் கோலா உருண்டை

செய்முறை கொத்துக்கறியை சுத்தம் செய்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். இதை எடுத்து விட்டு மிக்ஸியில் பொட்டுக்கடலையை தனியாக அரைத்துக்கொள்ளவும். இத்துடன் தேங்காய் துருவல், பெருஞ்சீரகம் இரண்டையும் சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இவற்றுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், அரைத்த கொத்துக்கறி சேர்த்து நன்கு பிசையவும். தண்ணீர் சேர்க்கக்கூடாது. கறியில் இருக்கும் தண்ணீரே போதுமானது. கெட்டியாக இருப்பதுபோல தோன்றினால், லேசாக தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். இப்போது கறி கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு, மிதமான தீயில் அடுப்பை வைத்து, 2, 3 உருண்டைகளை போடவும். கலர் பொன்னிறத்துக்கும் சற்று கூடுதலாக வரும்போது கோலா உருண்டையை எடுத்து விடவும். அவ்வளவுதான்…. மட்டன் கோலா ரெடி.

The post மட்டன் கோலா உருண்டை appeared first on Dinakaran.

Related Stories: