பான் இந்தியா படத்தில் சந்தீப் கிஷன்

சென்னை: சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் பான் இந்தியா ஃபேண்டஸி படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. தெலுங்கில் ‘சம்பாலா’ என்ற படத்தை தயாரித்த ஷைனிங் பிக்சர்ஸ், மீண்டும் ‘சம்பாலா’ இயக்குனர் உகந்தர் முனியுடன் இணைந்து, இன்னொரு பிரமாண்டமான படத்தை தயாரிக்கிறது. மகிதர் ரெட்டி, ராஜசேகர் அன்னபிமோஜு ஆகியோர், முன்னதாக ஆதி சாய்குமார் நடித்த ‘சம்பாலா’ என்ற படத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தனர். சந்தீப் கிஷனின் திரையுலக வாழ்க்கையில் அதிக பொருட்செலவில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, வரும் ஆகஸ்ட் மாதம் ஐதராபாத்தில் தொடங்குகிறது.

Related Stories: