சென்னை: ‘பொம்மை’ என்ற ஈழத்தமிழ் படம் பல்வேறு நாடுகளில் பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை குவித்து வருகிறது. படத்தை தயாரித்துள்ள பாஸ்கரன் கந்தையா கூறுகையில், ‘‘ஈழத்தமிழ் படைப்புகள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பது தான் தனது முதல் எண்ணம். பொம்மை படத்தை பார்த்தால் தான் இலங்கை தமிழ் மக்களின் வலி எல்லோருக்கும் புரியும். இந்த திரைப்படத்தை பிரான்ஸ், கனடா என பல நாடுகளில் இருந்து வந்து பார்த்தார்கள்.
அதில் கனடாவில் இருந்து வந்த ஒருவர் உடனே படத்தை தங்கள் நாட்டில் திரையிட ரைட்ஸ் வேண்டும் என கேட்டார். அந்தளவுக்கு எல்லோரிடமும் நேர்மறை கருத்துக்களை இந்த திரைப்படம் பெற்றுள்ளது என்றார். இந்த படத்துக்கு இயக்கம் – நவயுகா குகராஜா. ஒளிப்பதிவு – மதுனிஹிரன்யா அழகக்கோன் வற்சு. இசை – எம்.ரஜனிகாந்த்.
படத்தொகுப்பு – மாருதி.கே. நவயுகா குகராஜா, யசோதா , திருமலை பிரணவன், சுகிர்தன் கிறிஸ்துராஜா,ரெக்சன் விக்கி, மல்லிகா கீர்த்தி, ஐங்கரன் ஜெனொஷியா உள்ளிட்ட இலங்கை கலைஞர்கள் நடித்துள்ளனர். இது சுவீடன் நாட்டின் சேர்ந்த லுலீயா சர்வதேச திரைப்பட விழாவிலும் போடன் சர்வதேச திரைப்பட விழாவிலும் தமிழகம் சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை வென்றுள்ளது. அத்தோடு சினி ரோயல் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியுள்ளது.
