நட்டி நடிக்கும் டிஎன் 2026

சென்னை: கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்கும் படம் ‘டிஎன் 2026’. இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் நாயகிகளாக நடித்துள்ளனர். எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தம்பி ராமையா கதை எழுதியுள்ளார். தர்புகா சிவா, இசை. ஒளிப்பதிவு பி.ஜி.முத்தையா.

Related Stories: