சென்னை: பல்வேறு மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தோழிகளுடன் மாமல்லபுரம் பகுதியில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில் அவரது தோழி ஒருவர் உயிரிழந்தார். பிறகு அதிலிருந்து மீண்டு மறுபடியும் நடித்து வரும் யாஷிகா ஆனந்த், நாள்தோறும் சோஷியல் மீடியாவில் தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தனது இடது கையில் கட்டு போட்டிருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில், தனது தோழிகளுடன் பந்து விளையாடியபோது தவறி கீழே விழுந்ததில், தனது கையில் எலும்புமுறிவு ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
