தேர்தலுக்குப் பின் நடந்த வன்முறை மே. வங்கத்தில் மண்டல வாரியாக விசாரணை: சிபிஐ அறிவிப்பு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு பிறகு, பாஜ. நிர்வாகிகளை திரிணாமுல் காங்கிரசார் வன்முறையில் ஈடுபட்டு கொன்றதாகவும், அவர்களின் வீட்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த வன்முறைகள் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையின்படி, கொலை, கொலை முயற்சி, பாலியல் பலாத்காரம் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐ.யும், இதர சம்பவங்கள் பற்றிய வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரிக்கும்படி கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த வாரம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, வன்முறை தொடர்பான வழக்குகளை ஒப்படைக்கும்படி, மாநில டிஜிபிக்கு சிபிஐ கடிதம் எழுதி இருந்தது. அவர்கள் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில், சிபிஐ முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. இந்நிலையில், வன்முறை சம்பவம் தொடர்பாக மேற்கு வங்கத்தை 4 மண்டல வாரியாக பிரித்து விரிவான விசாரணை நடத்தப் போவதாக சிபிஐ அறிவித்துள்ளது. இதற்காக, 4 இணை இயக்குனர்கள், ஏராளமான டிஐஜிக்கள், 16 எஸ்.பிக்கள் அடங்கி குழுவினர் மேற்கு வங்கம் விரைந்துள்ளது. இவர்கள் குழுக்களாக பிரிந்து மண்டல வாரியாக சென்று வன்முறை தொடர்பாக விசாரணை நடந்த உள்ளனர். ஒரு மாநிலத்தில் வன்முறையை விசாரிக்க இவ்வளவு பெரிய சிபிஐ குழுவை ஒன்றிய அரசு அனுப்பி இருப்பது இதுவே முதல்முறை. சிபிஐ.யின் இந்த விசாரணையால் மம்தா அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது….

The post தேர்தலுக்குப் பின் நடந்த வன்முறை மே. வங்கத்தில் மண்டல வாரியாக விசாரணை: சிபிஐ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: