அதிகாரிக்கு வந்த மர்ம இமெயில் உள்துறை அமைச்சகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பீதி

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சகத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதாக வந்த மர்ம இமெயிலால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியின் வடக்கு பிளாக் பகுதியில் ஒன்றிய உள்துறை அமைச்சக அலுவலகங்கள் அமைந்துள்ளன. அங்குள்ள அதிகாரி ஒருவருக்கு நேற்று மதியம் மர்ம இமெயில் வந்தது. அதில் வடக்கு பிளாக் பகுதியில் வெடிகுண்டு வைத்து தகர்ப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரி அளித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்தனர். 2 தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டன. வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கு இடமான எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதனால் இந்த மிரட்டல் வெறும் புரளி என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் டெல்லியில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு மிரட்டல் இமெயில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post அதிகாரிக்கு வந்த மர்ம இமெயில் உள்துறை அமைச்சகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பீதி appeared first on Dinakaran.

Related Stories: