பலாத்கார வழக்கில் முன்னாள் எம்எல்ஏவுக்கு 25 ஆண்டு சிறை

ஷில்லாங்: மேகாலயா மாநில தேசிய பழங்குடியினர் விடுதலை கவுன்சில் தலைவர் ஜூலியஸ் டார்பாங் என்பவர் மீது கடந்த 2007ம் ஆண்டு சிறுமி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். அதையடுத்து ஜூலியஸ் டார்பாங்கை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு மேகாலயா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், நீதிபதி எப்.எஸ்.சங்மா தற்போது தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில், ஜூலியஸ் டார்பாங்க் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 25 ஆண்டு கால சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார். முன்னதாக பலாத்கார வழக்கு நடந்த காலகட்டத்தில், போதே சட்டசபை தேர்தலில் ஜூலியஸ் டார்பாங் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது….

The post பலாத்கார வழக்கில் முன்னாள் எம்எல்ஏவுக்கு 25 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: