சென்னை: ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம், ‘கான் சிட்டி’. இதில் அர்ஜூன் தாஸ், மலையாள நடிகை அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, மாஸ்டர் அகிலன் நடித்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிக்க, ஹரீஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார்.
மங்களூரு, சென்னை, மும்பை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் திரைக்கு வரும் இப்படத்துக்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, ராஜ்கமல் அரங்கம் அமைத்துள்ளார். அருள் மோசஸ் எடிட்டிங் செய்ய, ஆக்ஷன் சந்தோஷ் சண்ைடப்பயிற்சி அளித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
