அஜித் வீட்டில் இன்னொரு நடிகர்

தற்போது சினிமா, கார் ரேஸ் ஆகிய இரண்டு துறைகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார், அஜித் குமார். சினிமாவிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனது குடும்பத்தை பற்றி பொதுவெளியில் கொண்டு வருவதை தவிர்த்து வருகிறார், அஜித் குமார். அவரது மனைவி ஷாலினியும் நடிகை என்பதால், திருமணத்தக்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். மேலும், ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், அஜித் குமாரின் மற்றொரு குடும்ப உறுப்பினர் ஒருவர் நடிகராகி இருக்கிறார். அஜித் குமாரின் அண்ணன் அனில் குமார் ஒரு தொழிலதிபர்.

அவர் ‘ஜோடி 365.காம்’ என்ற திருமண தகவல் மையத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க அனில் குமார் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பதிவில், ‘திருமண தகவல் சேவை நடத்தி வரும் நான், தற்போது ஹாலிவுட்டில் நடிகராக காலடி எடுத்து வைக்கிறேன். ‘கோகோ அண்ட் நட்’ என்ற சர்வதேச ரொமான்டிக் காமெடி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். நிஜ வாழ்க்கையில் நான் எப்படி ஒரு வெற்றிகரமான மேட்ச் மேக்கராக இருக்கிறேனோ, அதுபோலவே இப்படத்திலும் மிஸ்டர் மேட்ச் மேக்கராக நடிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: