அனோமி விமர்சனம்

தடவியல் நிபுணர் பாவனா. மனநிலை பாதித்த ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த வழக்கை போலீஸ் அதிகாரி ரஹ்மான் ஏனோதானோ என்று விசாரிக்கிறார். இந்நிலையில், பாவனாவின் தம்பியும் உயிரிழக்கிறார். இரண்டு மரணங்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமை மற்றும் பிரேத பரிசோதனை தகவல்களை வைத்து, இரண்டும் திட்டமிட்ட படுகொலை என்பதை பாவனா கண்டுபிடிக்கிறார்.

பிறகு நடப்பது உறைய வைக்கும் கிளைமாக்ஸ்.
முழு படத்தையும் தனது தோளில் தூக்கி சுமந்திருக்கும் பாவனா, தம்பியின் இழப்பை தாங்க முடியாமல் கதறுவது உருக்கம். அவரது தீவிர புலன் விசாரணை ஸ்டைல் விறுவிறுப்பாக இருக்கிறது. இப்படம் தமிழில் பாவனாவுக்கு ஒரு ‘கம்பேக்’ ஆக இருக்கும். காவல்துறை அதிகாரியாக கண்ணியமாக நடித்துள்ளார், ரஹ்மான்.

மற்ற நடிகர்கள் ஷெபின் பென்சன், அர்ஜூன் லால், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா ஆகியோரும் படத்துக்கு வலு சேர்த்துள்ளனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவு, விறுவிறு. ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையில் பின்னணி இசை பரபரப்பு. எடிட்டர் கிரியன் தாஸ் பணி அசத்தல். சைக்கோ திரில்லர் ஜானரில் படத்தை எழுதி இயக்கிய ரியாஸ் மராத், அறிவியல் பூர்வமாக கதையை கையாண்டுள்ள விதம் பதற்றத்துடன் ரசிக்க வைக்கிறது.

Related Stories: