ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள படம், ‘ஹேப்பி ராஜ்’. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், வரும் 27ம் தேதி படம் திரைக்கு வருவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் இதர பாடல்கள் மற்றும் டிரைலரை வெளியிடும் பணிகள் தொடங்குகிறது. பியாண்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
மரியா எழுதி இயக்கியுள்ளார். இவர், இயக்குனர் பிரதீப் ரங்கநாதனிடம் உதவியாளராக பணியாற்றியவர். ஜி.வி.பிரகாஷ் குமார், அப்பாஸ், ஸ்ரீகவுரி பிரியா, ஜார்ஜ் மரியன் உள்பட பலர் நடித்துள்ளனர். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.
