செல்வராகவன் பட டீசரை தனுஷ் வெளியிட்டார்

சென்னை: கதையின் நாயகனாக இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் படம், ‘மனிதன் தெய்வமாகலாம்’. இப்படத்தின் டீசரை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை வயோம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் விஜயா சதீஷ், ஆர்.எஸ்.சதீஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

செல்வராகவன், குஷி ரவி, ஆர்.எஸ்.சதீஷ், கவுசல்யா, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரன், லிர்த்திகா, சேலம் தீபக், சுதா, ஜோதி கண்ணன் நடித்துள்ளனர். ஏ.கே.பிரியன் இசை அமைக்க, எஸ்.தீபக் எடிட்டிங் செய்துள்ளார். கே.ரவி வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related Stories: