புதுடெல்லி: நாட்டின் ஒட்டுமொத்த தினசரி கொரோனா பாதிப்பில் 54 சதவீதம் அளவிற்கு கேரளாவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 40,120 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களில் 585 பேர் உயிர் இழந்துள்ளனர். நாடு முழுவதும் 42,295 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 21 லட்சத்து 17 ஆயிரத்து 826 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 13 லட்சத்து 2 ஆயிரத்து 345 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 85 ஆயிரத்து 227 ஆகவும், மொத்த இறப்பு எண்ணிக்கை 4 லட்சம் 30 ஆயிரத்து 254 ஆகவும், இதுவரை போடப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை 52.95 கோடியே 82 ஆயிரம் டோசாகவும் உள்ளன. நேற்று மட்டும் 57.31 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 48.94 கோடி கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று சுமார் 19.70 லட்சம் கொரோனா மாதிரி சோதனைகள் நடத்தப்பட்டன. கொரோனா இறப்பு விகிதம் 1.34 சதவீதமாகவும், மீட்பு விகிதம் 97.45 சதவீதமாகவும் உள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாட்டிலேயே கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 21,445 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில், 160 பேர் தொற்றுநோயால் இறந்துள்ளனர். நாட்டின் மொத்த தினசரி கொரோனா பாதிப்பில் கேரளாவில் மட்டும் 53.45 சதவீதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது….
The post நாட்டின் ஒட்டுமொத்த தினசரி பாதிப்பில் கேரளாவில் 54% கொரோனா பதிவு: ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.