மார்ச் 6ல் ‘செல்லமடா நீ எனக்கு’

தாயை வெறுக்கும் மகன், மகனுக்காக வாழும் தாய் ஆகியோரை மையப்படுத்தி, அதனுடன் மகனின் காதலையும் இணைத்து உருவாகியுள்ள படம், ‘செல்லமடா நீ எனக்கு’. வசீகரன், நேஹா, போஸ் வெங்கட், ‘பசங்க’ செந்தி, அமுதவாணன், மீரா கிருஷ்ணன், ரிஷா நடித்துள்ளனர். கலைமகள் புரொடக்‌ஷன் சார்பில் சிறுமடை லிங்கம்.எஸ் தயாரிக்க, ஆனந்த் சிவம் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

செல்வா.ஆர் ஒளிப்பதிவு செய்ய, தாஜ்நூர் இசை அமைத்துள்ளார். மதுரா வேள்பாரி கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ளார். கண்களை குளமாக்கும் நெஞ்சுருக வைக்கும் காட்சிகளும், மனதை வருடும் மென்மையான பாடல்களும் மற்றும் துள்ளலிசை பாடல்களும் கொண்ட இப்படம், வரும் மார்ச் 6ம் தேதி திரைக்கு வருகிறது. இதை உத்ரா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது.

Related Stories: