மும்பை: மலையாள நடிகை கீது மோகன்தாஸ், தமிழில் ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’, ‘நள தமயந்தி’, ‘பொய்’ ஆகிய படங்களில் நடித்தார். பிறகு மலையாளத்தில் மட்டுமே நடித்து வந்த அவர், கடந்த 2009 முதல் நடிப்பில் இருந்து ஒதுங்கினார். பிறகு ‘லையர்ஸ் டைஸ்’ என்ற இந்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து ‘மூத்தோன்’ என்ற மலையாள படத்தை இயக்கினார். தற்போது கன்னட நடிகர் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ பைரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
பான்வேர்ல்ட் படமாக உருவாகும் இதில் யஷ், கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா நடிக்கின்றனர். வரும் மார்ச் 19ம் தேதி படம் திரைக்கு வருகிறது. ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். இந்நிலையில், பெண்களை மையமாக வைத்து கீது மோகன்தாஸ் இயக்கும் புதிய படத்தில், மீண்டும் கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதால், இன்னும் கியாரா அத்வானி நடிப்பது உறுதியாகவில்லை.
