காளிதாஸ் 2 விமர்சனம்…

மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனந்த் நாக், அபர்ணதி தம்பதியின் 4 வயது பெண் குழந்தை திடீரென்று காணாமல் போகிறது. அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை அதிகாரிகள் பரத், பவானிஸ்ரீ குழு தீவிரமாக ஈடுபடும்போது, அதே குடியிருப்பில் வசிக்கும் ஜூனியர் வக்கீல் அஜய் கார்த்தியை சந்தேகப்பட்டு கைது செய்து விசாரிக்கின்றனர். அப்போது காணாமல் போன குழந்தையின் சடலம் கிடைக்கிறது.

இந்நிலையில், அஜய் கார்த்தியை சீனியர் வக்கீல் பிரகாஷ்ராஜ் காப்பற்றுகிறார். குழந்தையை தொடர்ந்து மேலும் சிலரது திடீர் மரணம் நிகழ்ந்து அதிர வைக்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. கிரைம் சஸ்பென்ஸ் திரில்லரில் போலீசாக வரும் பரத், விசாரணையில் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவருக்கு ஜோடி, டூயட், பில்டப் சாங், பன்ச் டயலாக் கிடையாது. அஜய் கார்த்தி தனது பார்வையாலேயே நடித்து அசத்தியுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு ‘பூவே உனக்காக’ சங்கீதா, தனது இருப்பை பலமாக வெளிப்படுத்துகிறார்.

போலீஸ் உயரதிகாரி பவானிஸ்ரீ கம்பீரமாக நடித்துள்ளார். குழந்தையை பறிகொடுத்த அனந்த் நாக், அபர்ணதி தம்பதி உருக வைத்துள்ளனர். பிரகாஷ்ராஜ், ‘ஆடுகளம்’ கிஷோர் கதையின் திருப்புமுனைக்கு உதவியுள்ளனர். பரபரப்பான விசாரணை காட்சிகளுக்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, இசை அமைப்பாளர் சாம் சி.எஸ் கடுமையாக உழைத்துள்ளனர். எடிட்டர் புவன் சீனிவாசன் பணி கச்சிதம். அரவிந்தன் ஆனந்த் திரைக்கதைக்கு கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ஸ்ரீசெந்தில், போலீசாருக்கு பெருமை சேர்த்திருக்கிறார். இறுதியில் எதிர்பாராத முடிச்சு போட்டு, ‘காளிதாஸ்’ 3ம் பாகத்துக்கு லீடு கொடுத்துள்ளார்.

Related Stories: