ராமாயண கதையை மையப்படுத்தி பல தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் நமீத் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகியுள்ள படம், ‘ராமாயணா’. ராமராக ரன்பீர் கபூர், ராவணனாக யஷ், சீதையாக சாய் பல்லவி, லட்சுமணனாக ரவி துபே, ஹனுமானாக சன்னி தியோல் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் இசை அமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர், ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து இசை அமைத்துள்ளனர்.
ஸ்ரீதர் ராகவன் எழுதியுள்ளார். முதல் பாகம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. 2வது பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகிறது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து ‘ராமா’ என்ற டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரின் வித்தியாசமான தோற்றங்கள், பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இறுதியில், ராவணன் கேரக்டருக்கான தோற்றமும் இடம்பெற்றுள்ளது.
