விஷாகாவின் பான் இந்தியா இசை ஆல்பம்

சென்னை: இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையில், விகாஷ் நாகராஜ் இயக்கத்தில் வெளியான பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல’. தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla). தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பம், தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் என்பது குறிப்பிடத்தக்கது.‘மாலை பொழுதின் மயக்கத்திலே’.

‘கோலி சோடா 2’, ‘விழித்திரு’, ’கொலையுதிர் காலம்’, ‘மழை பிடிக்காத மனிதன்’ உள்ளிட்ட பல படங்களின் மூலம் தமிழில் பல ஹிட் மற்றும் டிரெண்டிங் பாடல்களை கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையமைப்பில் உருவாகியுள்ளது. டிஜே அருணாச்சலம், விஷாகா திமன் நடித்துள்ளனர். இந்த இசை ஆல்பத்தை பிரபாத் புரொடக்‌ஷன்ஸ் சார்பில், பிரபாத் கிராந்தி ரெட்டி தயாரித்திருக்கிறார். சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Related Stories: